முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மகா கும்பாபிஷேகம் அழைப்பிதழ்

சமீபத்திய இடுகைகள்

களக்காடு அங்காளபரமேஸ்வரி அம்மன் காயத்ரிமந்திரம்

  அன்னை அங்காளபரமேஸ்வரி அம்மன் காயத்ரி மந்திரம்  காயத்ரி மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுவது. ராஜரிஷி விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட இது, மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா 'மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்' என்றே குறிப்பிட்டுள்ளார்.  ஓம் காளிகாயை வித்மஹே  மாதாஸ்வ ரூபாயை தீமஹி,  தன்னோ அங்காளி ப்ரசோதயாத் .    ஓம் மஹா சக்தியைச்ச வித்மஹே சிவ பத்னிச தீமஹி தன்னோ அங்காள பரமேஸ்வரி ப்ரசோதயாத் "பயம் வேண்டாம்"   "நல்லது நடக்கும்"

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்( சிவராத்திரி )

உ ஸ்ரீ கீழகுருநாதர் சுவாமி துணை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் , களக்காடு. மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி  கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப்  பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம  விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த  இரவை,தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி‘என்றே கொண்டாட வேண்டும் என்று  வேண்டினாள்.   சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை (சிவனை)ப் பூஜை  செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க  வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அ...

Sri Angalaparameshwari Amman

உ ஸ்ரீ  கீழகுருநாதர் சுவாமி துணை பயம் வேண்டாம்   நல்லது  நடக்கும் களக்காடு கோவில்பத்து அ௫ள்மிகு அங்காளபரமேஸ்வரி  திருக்கோவில் மாசி திருவிழா அழைப்பிதழ்             நிகழும் மங்களகரமான 1194 ஆம் ஆண்டு விளம்பி வருடம் மாசி மாதம் 7 ஆம் நாள் 19.02.2019 செவ்வாய் கிழமை பௌர்ணமி அன்று மாலை கால்நாட்டு நடைபெறும்.அதற்கு பின் மாசி மாதம் 11ஆம் நாள் 23.02.2019 காலை கோவிலில் கொடியேற்றி முதல் நாள் திருவிழா துவங்கும் அன்றிலிருந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.  23.02.2019 -  கொடியேற்றுல்,காப்புக்ககட்டுதல் 01.03.2019 - முகம் வீதி சுற்றுதல் 04.03.2019 - மகா சிவராத்திரி  05.03.2019 - பேச்சி பூஜை பக்தர்கள் அம்மன் அருள் பெற அழைகிறோம் முகவரி -  Angalaparameshwari Temple(Mathan kovil) kovilpathu kalakad Sri Angala Parameshwari temple, Kovilpathu, Kalakkad, Tamil Nadu 627501 093455 60272 https://goo.gl/maps/G8A7UT13zkp சுபம்

Om Sri Angalaparameswari Amman(Mathang Kovil Kalakad)

 உ  களக்காடு கோவில்பத்தில் எழுந்தருளிய அருள்மிகு  அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் , கீழகுருநாதர் திருக்கோவில் என்றும் மாதாங் கோவில் என்றும் அழைக்கபடுகிறது.  கோவில் கன்னி மூலையில் அமர்ந்திருக்கும் கணபதியை வணங்கிட துன்பங்கள் அகலும்  அனைத்து மாதாங் கோவிலிலும் அம்மனுடன் வீரபுத்திரர், குருநாதர்  இருபார்கள். இக்கோவிலில் மூலஸ்தானத்திற்கு அடுத்த அறையில் மூல கணபதி, நாகராஜர் மற்றும் குருநாதர் உள்ளனர். மாதாங் கோவில் சக்தி அம்சமாக இருந்தாலும்  சிவானுக்கு மோக்சம் கொடுத்துவள் சிவ கல்யாணம் எற்றவள் அதனால் அனைத்து மாதாங் கோவிலில் அம்மன் வாகனமாக நந்தி பகவான் இருப்பார். நந்திக்கு வலது புரம் வீரப்புத்திரரும், இடது புரத்தில் இருளப்பரும் அம்மனுக்கு காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள். நந்தியின் பின்புரம் கொடிமரம்,பலிபீடம்  அமைந்துள்ளது. இக்கோவிலில் மேலும் பேச்சிஅம்மன், கல்யாணி, பிரம்மசக்கி, ஓண்டிவீரர், நாகராணி, சூடலைமடான், இசக்கியம்மன், சாஸ்தா, காமாட்சி, காத்தவராயன், மீனாட்சி, கருப்பசாமி, மாடத்தியம்மன், நடைகாப்பான் கவி, சந்திர கவி, கோ...