முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்( சிவராத்திரி )


ஸ்ரீ கீழகுருநாதர் சுவாமி துணை



அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ,களக்காடு.

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி  கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப்  பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.
நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம  விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த  இரவை,தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி‘என்றே கொண்டாட வேண்டும் என்று  வேண்டினாள்.
 
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை (சிவனை)ப் பூஜை  செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க  வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு,  அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
 பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான அங்காள பரமேஸ்வரிக்கு
உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு  உரியதாயிற்று.


இக்கோவிலில் பகலில் பால்குடம், மதியம் அன்னதானம், மாலை சிறப்பு அபிஷெகம் நடைபெறும்.
இரவு  (அழகு நிற்பது) சிவனும் சக்தியும் வாளில் காட்சி அளிப்பார்கள்.

பயம் வேண்டாம்               நல்லது நடக்கும்

சுபம்

கருத்துகள்

கருத்துரையிடுக

Thanks

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகா கும்பாபிஷேகம் அழைப்பிதழ்

  உ பயம் வேண்டாம்                       ந ல்லதே நடக்கும்   களக்காடு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் (மாதாங் கோவில்)     ஓம் சக்தி              நிகழும் மங்களகரமான 1200ஆம் ஆண்டு குரோதி வருடம் தை மாதம் 20 ஆம் நாள் 02.02.2025 ஞாயிறு கிழமை சதுர்த்தி அன்று உத்திரட்டாதி  நட்சத்திரத்தில் பகல் 10 முதல் 11 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. 30.01.2025 - காலை கணபதி ஹோமம்,மாலை தீர்த்தம் எடுத்து வருதல்  31.01.2025 - காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடைபெறும் மாலை முதல் யாகசாலை பூஜை நடைபெறும்  01.02.2025 - காலை இரண்டாம் யாகசாலை பூஜை நடைபெறும் பரிவார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம் நடைபெறும் மாலை மூன்றாம் யாகசாலை பூஜை நடைபெறும்  02.02.2025 - காலை 10-11.30 மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறும் பின் சிறப்பு அபிஷேகம் பூஜை மதியம் அன்னதானம் வழங்கப்படும் மாலை வாகன அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும். பக்தர்கள் அம்மன் அருள் பெற அழைகிறோம் இவன்  எ...

Sri Angalaparameshwari Amman

உ ஸ்ரீ  கீழகுருநாதர் சுவாமி துணை பயம் வேண்டாம்   நல்லது  நடக்கும் களக்காடு கோவில்பத்து அ௫ள்மிகு அங்காளபரமேஸ்வரி  திருக்கோவில் மாசி திருவிழா அழைப்பிதழ்             நிகழும் மங்களகரமான 1194 ஆம் ஆண்டு விளம்பி வருடம் மாசி மாதம் 7 ஆம் நாள் 19.02.2019 செவ்வாய் கிழமை பௌர்ணமி அன்று மாலை கால்நாட்டு நடைபெறும்.அதற்கு பின் மாசி மாதம் 11ஆம் நாள் 23.02.2019 காலை கோவிலில் கொடியேற்றி முதல் நாள் திருவிழா துவங்கும் அன்றிலிருந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.  23.02.2019 -  கொடியேற்றுல்,காப்புக்ககட்டுதல் 01.03.2019 - முகம் வீதி சுற்றுதல் 04.03.2019 - மகா சிவராத்திரி  05.03.2019 - பேச்சி பூஜை பக்தர்கள் அம்மன் அருள் பெற அழைகிறோம் முகவரி -  Angalaparameshwari Temple(Mathan kovil) kovilpathu kalakad Sri Angala Parameshwari temple, Kovilpathu, Kalakkad, Tamil Nadu 627501 093455 60272 https://goo.gl/maps/G8A7UT13zkp சுபம்